நாமக்கல் சந்தைப்பேட்டைப்புதூரைச்சேர்ந்தவர் கே.கே.வீரப்பன் (வயது 77). கடந்த 1996- ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில்கபிலர் மலைதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுசட்டமன்ற உறுப்பினர்ஆனார்.
தி.மு.க.வில், நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, மாவட்டஊராட்சிக்குழுத்தலைவர்,மாநிலங்களவைநாடாளுமன்ற உறுப்பினர்., ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். கடந்த 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது,கபிலர் மலைதொகுதியில்சுயேச்சையாகப்போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார்.
எனினும், அதன்பிறகு அரசியல் களம்அவருக்குப்பெரிதாகக்கைகொடுக்காததால், சிலஆண்டுகளாகத்தீவிரஅரசியலிலிருந்துஒதுங்கி இருந்தார். இதற்கிடையே உடல்நலமும் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை (ஜூன் 15) காலை அவருடைய இல்லத்தில் காலமானார்.
இவர், 12.8.1945- ஆம் ஆண்டு பிறந்தார்.இவருக்குச்சிவகாமி என்ற மனைவியும், கால்நடை மருத்துவர் சந்திரசேகர், பொறியாளர்ராஜேந்திர குமார்என இரு மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசிக்கின்றனர்.