Skip to main content

தொடங்கியது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

 

DMK district secretaries meeting started

 

எதிர்வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. இதற்காக அண்மையில் அதன் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது.

 

இதில் மாவட்டச் செயலாளர்கள் 72 பேர் காணொளி வாயிலாக இணைந்துள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் இந்த காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி பணி செய்வது குறித்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இந்த கூட்டத்தில் திமுக தலைமை கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மண்டல வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டங்கள் நடத்தி இருந்தார். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதை இலக்காக வைத்து பணிகளை திமுக துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !