Skip to main content

தமிழக முதல்வருக்கு தி.மு.க. தோழமை கட்சிகள் கடிதம் 

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
DMK comrade parties letter to the chief minister

 

 

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் கடந்த 29-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அதேபோல் இந்த கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்க கோரி தமிழக முதல்வருக்கு தி.மு.க.வின் தோழமை கட்சிகள் கடிதம் எழுதியுள்ளது. மும்மொழிக் கல்விக் கொள்கையை திணிக்கும் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கவேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘2026 தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு’- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
DMK chief M.K.Stal's announcement Formation of coordination committee to face 2026 elections

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு மேற்கொள்ளப்படும் என தி.மு.க தலைவரும், தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அதிமுக கவுன்சிலர்; எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
EPS action on AIADMK councilor involved in Armstrong incident case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.