/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijayakanth (3).jpg)
தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
உடல்நலக்குறைவால் தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விஜயகாந்த் மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டத்தையடுத்து, அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்' என தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)