/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sfsdfdgdg.jpg)
கரோனாவல் பாதிக்கப்பட்டு தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரோனா தொற்று மிக குறைந்த அளவில் தொற்றியுள்ளதால் விஜயகாந்த் நலமாக உள்ளார் என மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தத்துக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை புரிந்த விஜயகாந்த் மைத்துனரும், தேமுதிகவின் மாநில இளைஞரணி செயலாளருமான சுதிஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. செப்டம்பர் 28ந்தேதி விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என குறிப்பிட்டார். இந்த தகவல் அங்கு கூடியிருந்த விஜயகாந்த் கட்சி தொண்டர்களை மகிழ்ச்சி கொள்ளவைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)