Skip to main content

மாவட்ட ஆட்சியர் திறந்த தனியார் வங்கி கிளை 

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

District Collector opened a private bank branch

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 10-வது ஐசிஐசிஐ வங்கியின் கிளை சின்னசேலத்தில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் அவர்கள் பங்கேற்று திறந்து வைத்தார். 

 

இந்தியா முழுவதும் 6200 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது ஐசிஐசிஐ வங்கி. தமிழ்நாட்டில் மட்டும் 598 வங்கி கிளைகள் செயல்பட்டு வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி சின்னசேலம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சின்ன சேலத்தில் வங்கி கிளை ஒன்று திறக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பங்கேற்று குத்துவிளக்கேற்றி புதிய வங்கிக் கிளையை திறந்து வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பேசுகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் இந்த வங்கி கடனுதவி அளித்து வந்துள்ளது. வங்கி கிளை திறப்பு விழாவின் போது ரூ 10 லட்சம் கடன் உதவி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

சின்னசேலம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வியாபாரிகள், அரசு மானியம் சார்ந்து கடனுதவி பெறுபவர்கள் இந்த வங்கி மூலம் பயன்பெறலாம். அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள சரியான முறையில் கடன் உதவி பெற்று அதை திரும்ப செலுத்தினால் மேலும் மேலும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதுடன் வியாபார அபிவிருத்தி பெருகும் மற்றும் தொழில் அபிவிருத்தி விரிவடையும் என பேசினார். 

 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் வேண்டும்’ - மது பிரியர்கள் ஆட்சியரிடம் மனு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

people petition Ranipet District Collector to open Tasmac in their area

 

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளம் முள்ளுவாடி, மேட்டு முள்ளுவாடி, அரும்பாக்கம், குருந்தாங்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முள்ளுவாடி ஊராட்சி பகுதியில் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர் . 

 

அந்த கோரிக்கை மனுவில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு அறிவிப்பின் காரணமாக முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரமிருந்த அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்து கலவையை அடுத்த நெத்தம்பாக்கம் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

 

people petition Ranipet District Collector to open Tasmac in their area

 

முள்ளுவாடி கிராம பகுதியில் இருந்து நெத்தம்பாக்கம் வரை ஆறு கிலோமீட்டர் தொலைவு சென்று எங்களால் மதுபான பாட்டில்களை வாங்க இயலவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இப்பகுதியை சேர்ந்த சிலர், அரசு மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து  ஒரு குவாட்டர் பாட்டில் மீது 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

இதுகுறித்து புகார் சொன்னால் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதில்லை. இதனால் எங்களுக்கு பெரு நஷ்டம். விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்யும் மது பிரியர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபான பாட்டில்களை வாங்கி வருவதால் தங்களது ஒரு நாள் வருமானம் அதிலேயே செலவாகி விடுகிறது. கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், தங்களது கிராம பகுதியில் அரசு மதுபான கடையை கொண்டுவர வேண்டுமென மதுபான பிரியர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆவின் இனிப்பு, காரத்தில் முறைகேடு; ஒற்றை ஆளாக புகார் கொடுத்த விவசாயி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Aavin's sweet, salty abuse; Farmer who complained as a single person

 

ஆவினில் இனிப்பு கார வகைகள் செய்வதில் 12 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

 

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் கடந்த 2021 ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கார வகைகள் செய்ய வழங்கப்பட்ட உத்தரவில் 12 லட்சம் முறைகேடு எழுந்தது. மேலும், 2500 கிலோ நெய் ஆவினில் எடுக்கப்பட்டு வெளியே விற்பனை செய்யப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுப்பிரமணி என்கிற விவசாயி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மேலாளர் சபரிராஜன், மோகன்குமார், கோவை ஆவின் பொது மேலாளர் பாலபூபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்