kovai

Advertisment

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நீலகிரி,கோவையிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கோவையில் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

kovai

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான100 அடியில் 90 அடியைக் கடந்ததால் பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உள்ளது.அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கோவைக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்திலிருந்து 45 பேரிடர் மீட்பு வீரர்கள் கோவை விரைந்துள்ளனர்.