Skip to main content

எல்லை மீறிய போதை, முறை தவறிய உறவு... போலீசுக்கு வந்த இயக்குனர் ஹரியின் உறவினர் வீட்டுப் பிரச்சனை

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

“விஜய்.. காமினி.. ரெண்டு பேருமே ட்ரக் அடிக்ட்ஸ். அவங்களால, என் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கையே போச்சு.” - அருப்புக்கோட்டையில் நம்மைச் சந்தித்த கமலா பேச ஆரம்பித்ததுமே அழுதார்.  

 

kamala


  
“அந்த இருவராலும் புத்தி பேதலித்தவர் போல் ஆகிவிட்டாள் ஐஸ்வர்யா..” என்று குமுறிய கமலா, “காமினியின் அண்ணன் ஹரிஷ்,  ஐஸ்வர்யாவிடம்   ‘உன் புருஷன் விஜய், என் தங்கச்சியோட வாட்ஸ்-அப் நம்பருக்கு, அவனோட நிர்வாண போட்டோவை அனுப்பிருக்கான். பதிலுக்கு இவளும் அவளோட நிர்வாண போட்டோவை அனுப்பிருக்கா. இது நல்லாயில்ல. உன் புருஷனை கண்டிச்சு வை’ன்னு திட்டிவிட்டு, தங்கையின் வாட்ஸ்-ஆப் நம்பரிலிருந்து விஜய்யின் நிர்வாணப் படத்தை ஐஸ்வர்யாவுக்கு அனுப்பினான். ஹரிஷ் என்னோட சொந்த அண்ணன் மகன்தான். என்ன நடந்துச்சுன்னு அவன்கிட்டயே கேளுங்க..” என்று ஹரிஷின் செல் நம்பரைத் தந்தார்.

சென்னையிலுள்ள ஹரிஷை தொடர்புகொண்டோம். “ஆமா.. என்னோட சொந்தக்காரங்க (தங்கை காமினி) போன்ல இருக்கிற வாட்ஸ்-அப்ல விஜய்யோட நிர்வாணப் படத்தைப் பார்த்தேன். அதை ஐஸ்வர்யா அனுப்பி வைக்கச் சொன்னா.. அனுப்பி வச்சேன். அவ்வளவுதான். அந்த சொந்தக்காரங்க யாருன்னு உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இது சம்பந்தமா கேளம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம். அதற்கான எப்.ஐ.ஆர். எங்ககிட்ட இருக்கு. இது சம்பந்தமா எனக்கு போன் பண்ணாதீங்க. பத்திரிக்கைகாரங்கன்னா எனக்கு ஒண்ணும் பெரிசில்ல. நான் அதைவிட ரொம்ப பெரிய ஆளு. நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க.” என்று ஏனோ கத்தினார்.
 

iswarya vijay

விஜய் - ஐஸ்வர்யா



‘ஹரிஷ்,  தன்னை பெரிய ஆள் என்கிறாரே?’ கமலாவிடம் கேட்டோம். “அவன் பெரிய ஆளு இல்ல. அவனோட தாய்மாமா ஹரிதான் பெரிய ஆளு. சிங்கம் படத்தோட டைரக்டர் ஹரி தெரியும்ல. அவரோட சொந்தத் தங்கை பாரதியோட மகன்தான் இந்த ஹரிஷ். இத்தனைக்கும் ஹரிஷோட அப்பா ராஜாசிங் என்னோட சொந்த அண்ணன்தான். இந்த விவகாரத்துல,  டைரக்டர் ஹரி அவரோட செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் டிபார்ட்மென்டை செயல்படவிடாம பண்ணிட்டாரு. ஆனாலும், நாங்க விடல. குற்றவாளிகளை நாங்களே தேடிப்பிடிச்சு, போலீஸ்கிட்ட ஒப்படைச்சு, நடவடிக்கை எடுக்க வச்சோம்.” என்று பெருமூச்சு விட்டார்.

ஐஸ்வர்யா வாழ்க்கையில் காமினி எப்படி குறுக்கிட்டாள்?

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, சென்னை தி.நகரில் தாய், தந்தையருடன் வசித்து வருகிறார். சென்னை – கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  வசதியில் மிகவும் பின்தங்கியிருந்த மருமகன் விஜய்க்கு  ரூ.75 லட்சம் பெறுமான வீடு, ரெடிமேட் கடையை விரிவுபடுத்த ரூ.30 லட்சம், ரூ.7 லட்சத்தில் கார் என எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார் கமலா. ஆனால், குடிப்பழக்கத்தோடு டிரக் அடிக்டாகவும் இருந்த விஜய், தொழிலில் பெரும் நஷ்டப்பட்டார். இரண்டு தடவை கர்ப்பமாகி,  தாய் வீட்டுக்கு ஐஸ்வர்யா சென்ற போது,  தேடிவந்து விஜய்க்கு ‘கம்பெனி’ கொடுத்தாள் ராஜாசிங் மகளான காமினி. விஜய்யும் காமினியும் அண்ணன் – தங்கை உறவுமுறை என்பதால், முதலில் ஐஸ்வர்யாவுக்குச் சந்தேகமே எழவில்லை. கணவனின் போக்கில் மாற்றத்தைக் கண்டபோது, நண்பர் ஒருவர் எதேச்சையாக, விஜய் – காமினியின் நடவடிக்கைகள் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கூத்தடிப்பதுவரை சென்றுவிட்டது என்று சொன்ன பிறகுதான் உஷாரானார் ஐஸ்வர்யா. உடனே,  கணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்தாள்; அதிர்ந்தாள். 

காமினியின் தூண்டுதலால், விஜய் வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தித் தன்னைக் கொல்வதற்காகத் திட்டமிட்டதில், தன்னுடைய மூன்று மாதக் குழந்தை ரியா பலியானதை உணர்ந்தாள். போதைப் பழக்கத்துக்கு தீவிர அடிமையான விஜய், காமினியின் சேர்க்கையினால், மீண்டும் தன்னைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு, அது முடியாமல் போய்,  விவகாரத்து செய்வதற்கு ஆயத்தமானது கண்டு கொதித்துப் போனாள். காஞ்சிபுரம் மாவட்டம் - கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். 294(b), 323, 506(1) மற்றும் 507-வது பிரிவுகளின் கீழ் விஜய், அவருடைய அம்மா கலா தாஸ், மற்றும் ரவி மீது வழக்கு பதிவாகி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

kamini

காமினி



“சொந்த அண்ணன் ராஜாசிங்கின் மகள் காமினி என்பதால், தன் தாய் கமலா, வழக்கிலிருந்து அவளைக் காப்பாற்றிவிட்டார். கணவன் விஜய்யை தன்னிடமிருந்து பிரித்த காமினி ஒரு டிரக் அடிக்ட். அவளையும் கைது செய்ய வேண்டும்.” என்று நம்மிடம் ஆவேசமானார் ஐஸ்வர்யா. 

காமினியின் தந்தை ராஜாசிங்கை தொடர்பு கொண்டோம். “கமலாவும் ஐஸ்வர்யாவும். கதையைத் திரித்துப் பேசுகிறார்கள். ஐந்தாறு கோடி பெறுமான சொத்துக்களை வைத்துக்கொண்டு, பழைய பகையை மனதில் வைத்து, எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். என் மகள் காமினி சரியில்லாதவள் என்று கமலா சொல்கிறாள். பதிலுக்கு நானும் அவள் நடத்தை குறித்துப் பேச முடியும். நான் சாதாரண கார் புரோக்கர். டைரக்டர் ஹரி தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். எதிலும் கரெக்டாக இருப்பவர். சினிமா ஃபீல்டில் இருந்தாலும் தண்ணியடிக்க மாட்டார். சிகரெட் புகைக்க மாட்டார். அவர் பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள். என் மகள் காமினிக்கு அவ்வப்போது சாமி வரும். அதற்கான ட்ரீட்மென்ட்டில் இருக்கிறாள்.” என்றார்.

 

aiswarya



கமலாவோ  “போதைக்கு அடிமையானதால்தான் காமினிக்கு ட்ரீட்மென்ட் நடக்கிறது. அவளுடைய நச்சரிப்பால், விஜய் திட்டமிட்டு ஏற்படுத்திய கார் விபத்தில், என் மகளுக்கு முகத்தில் ஒரு பகுதி சிதைந்துபோனது. பிறந்து ஆறு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யா அவஸ்தைப்படுகிறாள்.” என்றார் வேதனையுடன்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

பழங்குடியினப் பெண்ணுக்கு விஏஒ பாலியல் தொந்தரவு; கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

VAO suspended for Misbehaviour of Tribal Woman in viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், நல்லாபாளையம் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் கிருத்திகா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கிருத்திகாவும் அவருடைய 11 வயது மகனும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் தன்னை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக, அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 

 

அவர் அளித்த அந்தப் புகார் மனுவில், ‘எனது கணவர் இறந்த நிலையில், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்கக் கோரி நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸிடம் விண்ணப்பம் ஒன்றை அளித்தேன். அப்போது அவர், கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.5,000 லஞ்சம் கேட்டு எனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். அதன்பின், சில நாட்கள் கழித்து, அவரிடம் ரூ.3,000 கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றேன். அதன்பின், அவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு விதவை உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறியதால் நான் இ-சேவை மையத்தில் பதிவு செய்தேன். 

 

இதனையடுத்து, என்னை இரவு நேரத்தில் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தகாத முறையிலும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அவர் என்னிடம் பேசிய செல்போன் பதிவு ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை வருவாய் கோட்டாட்சியர் காஜாசாகும் அமீது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.