அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யும், அட்லியும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரிகிறார்கள் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம் இருந்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்த படம் தற்போது வரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறிவருகின்றனர்.

Advertisment
Advertisment

atlee

பிகில் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்களும் எழுந்தது. அப்படி இருந்தும் படத்தின் வசூலை தற்போது வரை பாதிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பிகில் படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் சேர்ந்து விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் நேசமணி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடியை மையமாக வைத்து டிக் டாக் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நேசமணி என்ற கதாப்பாத்திரத்தில் வடிவேலு பேசும் வசனத்தை பேசி டிக் டாக் செய்துள்ளார் இயக்குநர் அட்லி.

Advertisment