Periyasamy - dindugal

மறைந்த தமிழக முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டுநினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர்மாளிகையின் முன்புகலைஞரின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க.துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானஐ. பெரியசாமி கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்ரபாணியும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

Advertisment

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, 'தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கிறது.இந்த மோசமான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஒழிக்க வேண்டும். கலைஞர்70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் உழைத்திருக்கிறார் அதேபோல் கழகத் தலைவர் ஸ்டாலினும்உயிரைக் கொடுத்து மன உறுதியோடு உழைத்து வருகிறார். அதனால்தலைவரையும் தளபதியையும்மனதில் நினைத்துக்கொண்டு கருத்து வேறுபாடுகளைக் கடந்து வரும்தேர்தலில் மன உறுதியோடு உழைத்து கழகத் தலைவரை முதல்வராக்கபாடுபட வேண்டும்.இதுதான் கலைஞரின் இந்தஇரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நாங்கள்அனைவரும் எடுத்துக்கொண்ட வீரசபதம்' என்று கூறினார்.

இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி. முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன். கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளரான நாகராஜ். தண்டபாணி மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெயன். திண்டுக்கல் யூனியன் முன்னாள் சேர்மன் சந்திரசேகர். முன்னாள் நகரமன்றத் தலைவர் பஷீர் அகமது. ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றியத் தலைவர் சத்தியமூர்த்தி. நகரச் செயலாளர் ராஜப்பா. ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன். யூனியன் சேர்மன் ராதா .விவேகனந்தன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.