Skip to main content

''நேரடியாகச் சென்று கேள்வியாய்க் கேளுங்கள், அவர்களைத் தூங்கவிடாதீர்கள்" - திமுக ஐ.பெரியசாமி பேச்சு!!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

dindigul dmk i periyasamy speech

 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முதன் முறையாக மாவட்ட தி.மு.க சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க சார்பில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ‌.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பங்கேற்று பேசும்போது, "தமிழகத்தில் திராவிட இயக்கம் என்றால் அது தி.மு.க ஒன்று மட்டும்தான். தற்போது தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடியின் எடுபுடி ஆட்சியை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்கள். இழந்த உரிமைகளை மீட்டெடுத்து நல்லாட்சி அமைய, ஸ்டாலின் தலைமையில் திமுகதான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை அலை தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு, ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதற்கு சூளுரை ஏற்போம்" என்றார்.

 

dindigul dmk i periyasamy speech


மேலும் அவர், "தேர்தல் ஆணையத்திடம் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு முழு அதிகாரம் கேட்டு பெற்றுத் தந்துள்ளோம். அதனால், தி.மு.க பூத் ஏஜென்ட்கள் நாங்கள் கொடுத்துள்ள அடையாள அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, களப்பணியாளர்கள் போல் தேர்தல் அதிகாரிகளிடம், நேரடியாகச் சென்று, கேள்வியாய்க் கேளுங்கள். வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட குறைபாடுகளைச் சரிசெய்து தரும்வரை அவர்களைத் தூங்கவிடாதீர்கள். நமக்குச் சாதகமான அனைத்து வாக்காளர்களையும், இந்த நான்கு நாள் முகாமில் சேர்ப்பது, உங்கள் கடமையாக இருக்க வேண்டும்" என்று வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் பேசினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வத்தலகுண்டு ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் உள்ளிட்ட  தி.மு.க நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.