dharmapuri mallapuram government school incident

அரசு பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்த மேசைமற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தர்மபுரி மாவட்டம் அ.மல்லபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானசெய்முறை தேர்வுகள் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. செய்முறை தேர்வுகள் முடிவடைந்ததைத்தொடர்ந்து மாணவர்களும் மாணவிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுவகுப்பறையில் இருந்த சில மாணவர்களும்மாணவிகளும் அங்கிருந்த மேசை, நாற்காலிகள்மற்றும் மின்விசிறிகளை அடித்து நொறுக்கினர். மேலும், நோட்டு, புத்தகங்களைக் கிழித்து வீசியுள்ளனர். இதனால் வகுப்பறையேபோர்க்களம் போன்று காட்சியளித்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து சம்பவத்தில்ஈடுபட்ட மாணவ மாணவிகளின்பெற்றோர்களைபள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள், நடந்தவற்றை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறியதுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கடிதமும்பெற்றுள்ளனர். இந்த சம்பவம்தொடர்பான வீடியோ காட்சிகள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் வேகமாகப் பரவியது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைசார்பாக ஆசிரியர்களிடமும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை5 நாட்களுக்கு பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.