Skip to main content

தோட்டக்கலை விவசாயிகளுக்கு விருது! தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்! 

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

dharmapuri district collector farmers awards apply online

 

விவசாயிகள் வருமானத்தை உயர்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகளின் ஈடுபாடு தற்போது அதிகரித்து வருகிறது. 

 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தோட்டக்கலைப் பயிர்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளர் விருதுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. 

 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இத்துறையின் இணையதளமான www.tnhorticulture.tn.gov.in இல் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.