Skip to main content

"கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு அறைக்கு 55 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன" - டிஜிபி சைலேந்திர பாபு

 

dgp sylendra babu last one year police control room received petition

 

திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

 

டிஜிபி சைலேந்திர பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளாகத்தில் மாணவர்கள் கண்டுபிடித்த ட்ரோன் கேமரா செயல்பாட்டை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறைக்கு 55 ஆயிரம் அழைப்புகள் புகார்களாக வந்துள்ளன. மேலும் அறிவியல் வளர்ச்சி காரணமாக, இருந்த இடத்தில் இருந்தே தமிழ்நாடு போலீசால் கண்காணிக்க முடிகிறது" எனப் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் என்.ஐ.டி துணை இயக்குநர் அருண் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா, எஸ்.பி. சுஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !