Skip to main content

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

 Dewatering of Se Dewatering of Sembarambakkam Lake; Flood warningmbarambakkam Lake; Flood warning

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது.

 

சென்னை மட்டுமல்லாது சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் மழை பொழிந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 324 ஏரிகளில் 22 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோல் 14 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கும்  தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  

 

புழல் ஏரியில் முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தற்பொழுது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி ஆழம் கொண்ட ஏரியில் 20 அடிக்கு நீர் நிரம்பியதால் எச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் 1,180 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 2,000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 100 கன அடி நீர் இரண்டாவது ஷட்டரில் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு காரணமாக சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

 

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி மற்றும் திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார்.

Next Story

கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! 

Published on 26/02/2024 | Edited on 27/02/2024

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.