Skip to main content

திருச்சியை திக்குமுக்காட வைத்த தேசம் காப்போம் ஆன்டி இந்தியன்கள்... 

Published on 23/01/2019 | Edited on 24/01/2019

 

திருச்சியில் ஜி.கார்னர் பொன்மலை இரயில்வே மைதானத்தில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது.

தேசம் காப்போம் மாநாடு நடத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நீண்ட கால திட்டம் என்றாலும், அனுமதி கிடைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீர் அனுமதிக்கு பிறகு குறைந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ.(எம்) பொதுசெயலாளர் சீத்தாராம்யெச்சூரி, சி.பி.ஐ. பொதுசெயலாளர் ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சி.பி.ஐ(எம்) மாநில பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. பொதுசெயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர், இந்தியன் மூஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர்மொஹிதீன், மனிதநேயமக்கள்கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


தமிழகம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொண்டர்கள், குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். பெரும்பாலும் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

எட்டு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா நடத்திய கண்டன ஆர்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுகவினர் திரண்டு வந்து திருச்சியை திணறடித்து ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது. அதன் பிறகு இந்த தற்போது நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு கூட்டமே இல்லாமல் பரிதாபமாக இருந்தது. 


திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பெரிய அளவில் கூட்டத்தை திரட்டியிருந்தனர். ஆனால் அதன் பிறகு மோடி நடத்திய பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை திரட்ட பெரும்பாடு பட்டனர். 

அதன் பிறகு ஜனவரி 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த தேசம் காப்போம் மாநாடுக்கு திரண்ட கூட்டம்தான் தற்போது திருச்சியை திக்குமுக்காட வைத்தது. தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் வாகன நெரிசலில் திக்குமுக்காடியது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்