WEATHER

தமிழ்நாட்டில் அதீத கனமழை பொழியும் என்பதால் நாளையும் (10.11.2021), நாளை மறுநாளும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 11ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவித்துள்ளது.