Denial of bail ... Extension of jail ...- Next shock for Mira Mithun!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுன்,கடந்த 14ஆம் தேதிகேரளாவில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளான15ஆம் தேதி காலை சென்னை அழைத்துவரப்பட்டார்.

Advertisment

ஆரம்பத்தில்விசாரணையில் வாக்குமூலம் தர மறுத்தமீரா மிதுன், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்புதெரிவித்தார் என கூறப்பட்ட நிலையில், 15 ஆம் தேதி அன்றே அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மீரா மிதுனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீரா மிதுனை போலீசார் சிறையிலடைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மீரா மிதுன் வேறொரு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டநிலையில் அவர் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை கே.எம்.பி நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் என்பவரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப்பேசிய வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின்நீதிமன்றக் காவலை வரும் செப்.9 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின்ஜாமீன் மனுவும்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment