மதுரை மாவட்டம், எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனான திருமலேஷ் கடந்த மூன்று நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிறுவன் சிகிச்சைப் பலனின்றி இன்று (22/01/2021) உயிரிழந்தார்.
மேலும், 9 வயதான திருமலேஷின் அண்ணன் மிருத்தின் ஜெயனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.