வேலூர் காகிதப்பட்டறை பள்ளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது 7 வயது மகன் அபினேஷ். அபினேஷுக்கு கடந்த நவம்பர் மாதம் 1ந்தேதி காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துரிடம் காட்டியும் காய்ச்சல் குறையவில்லை. அதன்பின் ரத்த பரிசோதனை செய்தபோது டெங்கு என தெரியவந்துள்ளது.

dengue fear in vellore

Advertisment

Advertisment

உடனடியாக வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த 21 நாட்களாக தொடர்ச்சியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தும் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் டிசம்பர் 1ந்தேதி இரவு உயிரிழந்துள்ளான். தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்திலும், புதியதாக உருவாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது தொடர் கதையாகியுள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் அரசு குறிப்பிடும் மர்மகாய்ச்சல் என்கிற டெங்கு காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகமாகும் என பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். மழை பயத்தை விட அதனால் வரும் நோய் பயமே மக்களை பாடாய் படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் வைத்துள்ள குடும்பத்தினர் அதிகமாகவே பயப்படுகின்றனர்.