Skip to main content

"தமிழக வேலை தமிழர்களுக்கே" த.வா.க சார்பில் ஆர்ப்பாட்டம்!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
tvk

 

 

தமிழ் நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில், இங்குள்ள அரசு பணிகளில் வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்த முயல்வதை ஏற்க முடியாது, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் பணி வழங்குவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'தமிழக வேலை, தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இணையவழி ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடைபெற்றன.

 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இணைய வழியாக அவரவர் வீடுகளில், அவரவர் பகுதிகளில் இருந்தபடி நெய்வேலியில் நடைபெற்றன.  ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன்,  தமிழர் படை தளபதி வே.க.முருகன்,  திருநாவுக்கரசு, விருத்தாசலம் நகர செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு "தமிழக வேலை, தமிழக இளைஞர்களுக்கே...' என்ற முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

2 ஆயிரம் காலி பணியிடங்களுக்குக் குவிந்த 25 ஆயிரம் இளைஞர்கள்; திக்குமுக்காடிய மும்பை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
25 thousand youth flocked to 2 thousand vacancies of Air India

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், ஏதாவது ஒரு நிறுவனம் இரு இலக்க எண்களில் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தினாலும், அங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். அண்மையில் குஜராத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வெறும் 10 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் அப்ளிகேசனுடன் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக போலீசாரின் உதவியுடன் நிலைமை சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் மும்பை ஏர் இந்தியா நிறுவனங்களில் 2,216 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பயணிகளின் உடைமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று(16.7.2024) நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கட்கிழமை(15.7.2024) இரவே மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகம் முன்பு குவியத் தொடங்கினர். அதில் பெருமளவிலான பட்டதாரி இளைஞர்கள் நேர்காணலுக்கான அப்ளிகேசனுடன் குவிந்திருந்தனர். நேற்று காலை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேர்காணலுக்கு நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேரங்கள் கடந்தும் கூட்டம் குறையாததால் ஏர் இந்தியா நிறுவனம், அனைவரும் விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துச் செல்லுமாறும், அதனைச் சரிபார்த்து தகுதி உள்ள நபர்களை நேர்காணலுக்கு அழைப்பதாகவும் கூறி நேற்று நடைபெறவிருந்த நேர்காணலை ரத்து செய்தது. இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

Next Story

10 பணியிடங்களுக்கு 1,000 பேர் குவிந்ததால் தள்ளுமுள்ளு; இளைஞர்களின் அவல நிலை!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
1000 candidates compete for 10 vacancies in gujarat

குஜராத் மாநிலம், பரூச் பகுதியில் ஜாகாதியா இடத்தில் தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்த 10 காலிப்பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான நேர்காணல் அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் கடந்த 8ஆம் தேதி நடந்துள்ளது.

ஆனால், இந்த பணியிடங்களுக்காக 1,800 பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.10 இடங்கள் கொண்ட பணிக்கு 1,000க்கும் மேற்பட்டோர் வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஹோட்டலில் நுழைவு வாயிலின் இரு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் நெருக்கியடித்து உள்ளே புகுந்துள்ளனர். சிலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி மோதியபடி உள்ளே சென்றனர். மேலும், தடுப்புக்காகப் போடப்பட்டிருந்த உலோக வேலியும் தள்ளப்பட்டு அந்த இடமே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, பா.ஜ.கவை கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், இந்த மாதிரி வேலையில்லாத் திண்டாட்டத்தை ஆளும் கட்சி, இப்போது நாடு முழுவதும் திணிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.