Skip to main content

மறைந்த ராணுவ வீரர் உடல் ஈரோட்டில் தகனம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

The deceased soldier's body was cremated in Erode

 

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (38 வயது). இவரது மனைவி நித்தியா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லை பாதுகாப்புப் படை வீரராக கடந்த 18 வருடங்களாக பணியாற்றினார். வடிவேல் திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வந்தார். தினமும் வடிவேல் தனது மனைவியுடன் போனில் பேசுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு கூட வடிவேல் தனது மனைவியுடன் செல்போனில் பேசினார். அப்போது திரிபுராவில் கடும் குளிர் நிலவி வருவதாக மனைவியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால்  சிகிச்சை பலனின்றி அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

The deceased soldier's body was cremated in Erode

 

இதுகுறித்த தகவல் வடிவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வடிவேல் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடிவேல் உடல் திரிபுராவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு 13ந் தேதி காலை கொண்டுவரப்பட்டது. பின்னர் ராணுவ வாகனத்தில் அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வடிவேல் உடல்  ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள மின் மயானத்தில் ராணுவ வீரர்கள் மரியாதையுடன்  21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீவிரமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு; பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Armstrong Case; anjalai Delete  from BJP

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 Armstrong Case; anjalai Delete  from BJP

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அஞ்சலையை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

நான்கு நாட்களாக மின்தடை; இருளில் மூழ்கிய 50 மலைக் கிராமங்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Power outage for four days; 50 hill villages plunged into darkness

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர்ப் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைபட்டது. மலைக்கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் 4- வது நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மலைக்கிராமங்களான கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி,காளிதிம்பம்,தடசலட்டி என 50 மேற்பட்ட மலைக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது .மின் தடையால் ஊராட்சிக்குச் செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகே உள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரைக் குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும், சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The website encountered an unexpected error. Please try again later.