Skip to main content

'மகளின் ஐ-பேட், மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர்'- கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் புகார்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

 'Daughter's iPad, laptop confiscated'- Karti Chidambaram's lawyer complains!

 

ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றிருந்தது. ஆனால் அன்றைய தினம் வீட்டின் ஒரு அறையில் மட்டும் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இல்லத்தில் அந்த குறிப்பிட்ட ஒரு அறையில் சிபிஐயை சேர்ந்த 7 அதிகாரிகள் சுமார் 3 மணிநேரம் சோதனை நடத்தினர். இன்று மலை அந்த சோதனையானது நிறைவு பெற்றது.

 

இந்நிலையில் இன்று சிபிஐ சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் கார்த்திக் சிதம்பரத்தின் மகளின்  ஐ-பேட், மடிக்கணினியை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். சிபிஐ இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் எனவும் கார்த்திக் சிதம்பரத்தின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

Published on 11/03/2024 | Edited on 11/03/2024

 

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார். 
 

Next Story

'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.