Daughter and mother passes away

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகில் உள்ளது சுள்ளூர். இந்த ஊரைச் சேர்ந்த சம்பத் என்பவரது மனைவி 45 வயது ஜெயந்தி. இவர்களது மகள் சக்திரூபா. குடும்ப பிரச்சனை காரணமாக சக்திரூபா சமீபத்தில் தீக்குளித்து இறந்து போய்விட்டார்.

Advertisment

மகள் இறந்த பிறகு மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார் ஜெயந்தி. இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் சக்திரூபா தீக்குளித்து இறந்த அதே இடத்தில் ஜெயந்தியும் தீக்குளித்து இறந்து போனார்.

Advertisment

தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.