உளுந்தூர்பேட்டை அருகே பல்லவாடி கிராமத்தில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சிலிண்டர் வெடித்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானது.

Advertisment

Cylinder Explosion near Ulundurpet More Than 10 Houses damage

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பல்லவாடி கிராமத்தில் இன்று காலை தங்கமலை என்பவர் வீட்டில் திடீரென மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைப்பதற்கு கிராம மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அருகாமையில் உள்ள செல்வராஜ், மணிகண்டன், சிவக்குமார், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் தீப்பற்றி மல மல என எரிய தொடங்கியது.

Advertisment

Cylinder Explosion near Ulundurpet More Than 10 Houses damage

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோயிலூர் தீயணைப்பு துறையினர் மூன்று வாகனங்களில் தீயை பெருமுயற்சியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த விபத்தில் 50 சவரன் நகையும் ரூ.6 லட்சம் பணமும் குடும்ப அட்டைகள், பள்ளி சான்றிதழ் , வீட்டுமனைபட்டா மற்றும் பத்திரங்கள் துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது. இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.