திருமண முறைகள் என்றாலே அது ஆடம்பரமானதாக மாறிவிட்டது. இக்காலத்தில் சாதாரண நடுத்தரக் குடும்பத்து திருமணங்கள் கூட வசதியான திருமண மண்டபங்களில் பல லட்சங்கள் செலவு செய்து ஆரவாரமாக நடத்தப்படுகிறது. எளிமையான திருமணங்கள் இப்போதெல்லாம் மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கிறது. அப்படி ஒரு திருமணம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. அதுவும் தமிழ் பண்பாட்டு முறையில் நடத்தி அசத்தியிருக்கின்றனர்.

The culture of the  couple is the unchanging 'cow-cart' journey

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த மணமகன் பரணி பிரகாஷ், மணமகள் சுபாஷினி.இருவருமே முதுகலைப்பட்டம் பெற்று நகர்புறத்தில் நல்ல வேலையில் உள்ளவர்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இவர்களது திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. புதுமண தம்பதியினர் இருவரும் கருங்கரடு முருகன் கோயிலிலிருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு புறப்பட்டனர்.அப்போதுதான் பலருக்கு வியப்பாக இருந்தது. இவர்கள் பயணம் செய்யும் வண்டி அது ஒன்றும் சொகுசு கார் அல்ல மாட்டு வண்டி.,அந்த மாட்டு வண்டியில் புதுமண ஜோடிகள் ஏறிக்கொள்ள சில உறவினர்களும் அந்த வண்டியில் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.

Advertisment

கோயிலில் இருந்து திருமண மண்டபம் சரியாக பத்து கிலோமீட்டர், முழுக்க கிராமப்புற பாதை அந்த மாட்டு வண்டியில் திருமண ஜோடிகள் வருவதைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமாகவும், அதேசமயம் உற்சாகமாகவும் அவர்களை வழி அனுப்பினார்கள். இளைஞர்கள் சிலர் மாட்டு வண்டியை நிறுத்தி வண்டியோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.கிராமப்புற பெண்கள் பலர் மணமக்களை வாழ்த்தி அனுப்பினார்கள்.

The culture of the  couple is the unchanging 'cow-cart' journey

இதுபற்றி மணமக்கள் கூறும்போது "நாங்கள் இருவரும் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் அல்ல, ஆனாலும் இன்றைய நாகரீக உலகம் நமது தமிழ் பண்பாட்டை புறந்தள்ளிவிட்டு புதிய புதிய நடைமுறைகளை உருவாக்கி வருகிறது. அந்த காலத்தில் மணமக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அதை நினைவுபடுத்தும் விதமாகவும் நமது பண்பாட்டின் சிறப்புகளை வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் நாங்கள் இந்த திருமணத்தை நடத்துகிறோம். பொதுவாக இதன் மூலம் எங்களின் திருமணம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. இது எங்களுக்கு சிறப்பாக உள்ளது" என்றனர்.

''மாட்டுவண்டி பூட்டிகிட்டு மணமக்களை கூட்டிகிட்டு சலங்க வண்டி போகுதடி அம்மாடி...''என சிலர் பாட்டுப் பாடியதும் அமர்க்களமாக இருந்தது.