/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20201024-WA0050 (2).jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கலப்பட டீ தூள் பயன்பாட்டில் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகரத்தில் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
அப்போது, கோயம்புத்தூரில் இருந்து விருத்தாசலத்திற்கு பார்சல் மூலமாக, 200 கிலோ எடை கொண்ட டீ தூள் மூட்டைகள் வந்தது. அதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நல்லதம்பி தலைமையிலான குழுவினர் மடக்கிப் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
மூட்டைகளிலிருந்து டீ தூள்களை, பரிசோதனை செய்த போது கலப்பட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர், அவற்றை பறிமுதல் செய்து, மூட்டைகள் அனுப்பியவர்கள் மற்றும் தயாரித்த நிறுவனங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)