Skip to main content

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது! 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

 

CUDDALORE DISTRICT VAO MONEY VIGILANCE OFFICERS

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நண்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் (வயது 38). கடந்த 2019- ஆம் ஆண்டு அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்குள் பாகப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில் இவருடைய பெயரில் பட்டா மாறுதல் செய்வதற்காகக் காட்டுக் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளியிடம் அணுகி உள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதல் செய்வதற்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். 10,000 தரமுடியாது என்று அரிகிருஷ்ணன் கூறியவுடன் 2,000 குறைத்துக் கொண்டு 8,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 

 

இதுகுறித்து அரிகிருஷ்ணன், கடலூரில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று (14/07/2021) லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் பணத்தை வி.ஏ.ஓ. செண்பகவள்ளியிடம் இன்று (14/09/2021) நேரில் வழங்கினார் அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங், ஆய்வாளர்கள் சண்முகம், திருவேங்கடம் உள்ளிட்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளியை கைது செய்து கடலூர் அழைத்து சென்று அவரை சிறையில் அடைத்தனர்.

 

விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கிராம நிர்வாக அலுவலர் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ; கையும் களவுமாக கைது செய்த போலீஸ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
VAO arrested for taking Rs 1000 lakh from agricultural labourer

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி(51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி, மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் கிராமத்தில் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்ச ரூபாய்க்கு கடந்த 21.2.2024 அன்று வாங்கியிருக்கிறார்.

இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மற்றும் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளது. அதன் பேரில் சமுத்திரம் வி.ஏ.ஓ. கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் வி.ஏ.ஓ.வாக உள்ள சிவ செல்வகுமார்(41) என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். 

அதன் பேரில் வையாபுரி கடந்த 1.3.2024 மதியம் பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சிவ செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வி.ஏ.ஓ செல்வகுமார் தனக்குத் தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர்மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், வி.ஏ.ஓ சிவ செல்வகுமார் தான் கூறிய தொகையில் பாதியை குறைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.  

லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று (5.3.2024) மதியம் 12 மணியளவில் சமுத்திரம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று, சிவ செல்வகுமார் வையாபுரியிடமிருந்து 1000 ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.