Skip to main content

போதையில் பஸ் கண்ணாடியை உடைத்த கரோனா நோயாளி! 

Published on 08/05/2020 | Edited on 08/05/2020
ccc



கடலூர் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. இதனுடன் சேர்த்து மொத்தம் எண்ணிக்கை 356ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்து கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக கடலூர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் 51பேர்,  கடலூர் அரசு மருத்துவமனையில் 105 பேர்,  விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 64 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 17 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 32 பேர் என சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது இல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் முகாம் அமைத்து அங்கும் தங்க வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி முகாம்களில் தங்க வைத்துள்ள  நபர்கள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை என்று நொந்து போயுள்ளனர் அதிகாரிகள்.  தொழுதூர் தனியார் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் என அனைத்து வசதிகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் சிலர் அதிகாரிகளை நோகடித்து வருகிறார்கள் .

 

கல்லூரியில் உள்ள குடிநீர் பைப் லைன்களை உடைப்பது குடிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள மினரல் வாட்டர் தண்ணீரில் குளிப்பது, துணி துவைப்பது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் அப்படித்தான் செய்வோம்.  எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.  நாங்கள் என்ன சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்களா? இங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போல் எங்களை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.

 

இப்படி அதிகாரிகளை கேள்வி கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதோடு நேற்று முகாமில் இருந்த ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்று டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி வந்து அதை குடித்துவிட்டு கல்லூரி வளாக முகாமில் தங்கியிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

o

தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று நேரில் விசாரணை செய்தனர். ரகளையில் ஈடுபட்டவர் லக்கூரை சேர்ந்த முல்லைநாதன் என்ற வாலிபர்.  இவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததுள்ளதையடுத்து அவரை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.  இது சம்பந்தமாக ராமநத்தம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  போலீசார் முகாமிலுள்ள அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.