
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பதால் பொதுமக்கள்குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்நிலைகளில்கடந்த சில தினங்களாக முதலைகள் நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சீதக்காடு, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை தென்பட்ட நிலையில், தற்பொழுது தாராபுரம் நகராட்சி பூங்காவிற்கு பின்புறம் உள்ள நீர்த்தேக்கத்தின் அருகாமையில் அமராவதி தடுப்பணை பகுதியில் 13 மற்றும் 12 அடி நீளம் உள்ள 2 முதலைகளை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இந்த தகவல் நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் பார்வையிட்டு முதலை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் அமராவதி ஆற்றில் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)