Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர்,  நாகை மற்றும்  புதுச்சேரி,  காரைக்கால் ஆகிய கடலோரம் மற்றும் டெல்டா பகுதிககளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும்  அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

v


இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கடலூரில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முத்தரசன், " மத்திய அரசாங்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்புதலை  ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.  இதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 


கூடத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த  மத்திய குழு உறுப்பினர் வாசுகி,  " கடலூர் மாவட்டத்தை பெட்ரோல் மற்றும் ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகள் முயற்சினை கைவிட வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, குமாரட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எற்படும் விளைவுகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக வருகின்ற 7,8 ஆம் தேதிகளில் இரு சக்கர வாகன பிரச்சார பயனத்தை மார்க்கிஸ்ட் கட்சி மேற்கொள்ள இருக்கிறது" என்றார்.  

 

v


மேலும் அவர்,  "குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், வங்கியில் விவசாயிகள் பெயரில் 300 கோடி மோசடி செய்த கரும்பு சர்க்கரை ஆலை நிர்வாகம், அதற்கான முழு பொருப்பையும் ஏற்றுகொண்டு, விவசாயிகளுக்கு எவ்வித தொந்தரவும் வங்கியில் இருந்து வராமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தலையீட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும், தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம், ஒவ்வொரு மண்டலத்திலும் தனியார் வாகனங்களில்  அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்டவைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு தடுக்க வேண்டும், நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் உடைய மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும், கருவேப்பிலங்குறிச்சியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி வழக்கினை சிபிசிஐடி விசாரனைக்கு மாற்ற வேண்டும், மத்திய அரசு மும்மொழி கொள்கையை திணிப்பது இரு மொழி கொள்கைக்கு எதிரானது. மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதித்து போராடுவோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம் - சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tirunelveli CPM Office incident CM explanation in the 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். 

Tirunelveli CPM Office incident CM explanation in the 

இச்சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூகநீதிக் கொள்கையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி, சமஉரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பக்காலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள். நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இதுபோன்ற இனங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது. 

Tirunelveli CPM Office incident CM explanation in the 

இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன” எனப் பேசினார்.

Next Story

தமிழகத்திலேயே முதலிடம் பிடிக்கும் திண்டுக்கல் தொகுதி; அடித்துச் சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Dindigul Constituency gets first place in Tamil Nadu by getting most votes

தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு சச்சிதானந்தம் வெற்றி இருக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி  ஏற்கெனவே சி.பி.எம். வேட்பாளர் அறிவிப்பின்போதே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார் அது தற்போது உறுதியாகி வருகிறது.

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் சிபிஎம் வேட்பாளராக சச்சிதானந்தம். அதிமுக கூட்டணியிலுள்ள எஸ்.டி.பி.கட்சி வேட்பாளராக முகமது முபாரக். பாமக வேட்பாளராக திலகபாமா. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கயிலை ராஜன். உட்பட பல சுயாட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டதின் பேரில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது

இப்படி நடந்து முடிந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு பெட்டிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் பாதுகாத்து வந்தனர். அதைத் தொடர்ந்துதான் இன்று வாக்கு எண்ணிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே சிபிஎம் வேட்பாளராக களமிறங்கப்பட்ட சச்சிதானந்தம் முதல் ரவுண்டிலேயே 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ரவுண்டுகளிலும் பல ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்று பதினெட்டாவது ரவுண்டில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 5 லட்சத்தி 60 ஆயிரத்து 527 வாக்குகளும். எஸ்டிபி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 243 வாக்குகளும். பாமக வேட்பாளர் திலகபாமா 91 ஆயிரத்து 561 வாக்குகளும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 80 ஆயிரத்து 684 வாக்குகளும்‌ பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும்போது 18ஆவது சுற்றி 3 லட்சத்தி 69 ஆயிரத்து 254 ஓட்டுக்கள் வாக்குகள் கூடுதலாக சச்சிதானந்தம் வாங்கி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதோடு இன்னும் ஆறு ரவுண்டுகள் இருப்பதால் அதன் மூலம் கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் அதைப் பார்க்கும் போது நான்கு லட்சத்து 50ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ஓட்டுகள் வரை கூடுதல் வாக்குகள் வாங்க வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை சி.பி.எம். வேட்பாளரான சச்சிதானந்தம் பிடித்து எம்.பி.ஆக வெற்றி பெறப்போவது உறுதியாக  தெரிகிறது.

ஆனால் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் தமிழக அளவில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்தது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் முழு  முழு ஆசியோடு தேர்தல் பிரச்சாரம் செய்ததன் மூலமே வெற்றி பெற்று இருக்கிறார். கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேலுச்சாமி 5,50,000 ஓட்டுகள் கூடுதலாக வாங்கி தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தார். அதுபோல் தற்பொழுது திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 4 லட்சத்து 75ஆயிரம் முதல் 5 லட்சத்துக்குள் ஓட்டுகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.