CPM Party members arrested

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காகவும், அதனைத் தொடர்ந்து மற்றொரு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தருகிறார்.

Advertisment

ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவானைக்காவல் பகுதியில் கருப்புக் கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், கம்யூனிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ளலார் மற்றும் காந்தியடிகளை குறித்து தவறாக விமர்சனம் செய்யும் ஆளுநருக்கு கண்டனம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்தப் போராட்டத்திற்கு சி.பி.எம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் திருவானைக்காவல் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.