Skip to main content

என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் இடத்துக்குச் செல்ல சிபிஎம் எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு  

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

CPM MLAs denied permission to go to NLC land acquisition site

 

வளையமாதேவி மற்றும் கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில், என்எல்சி நிறுவனம் விவசாயிகளின் நெற்பயிரை அழித்து வாய்க்கால் அமைக்கும் இடத்தில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ஆகியோரை சேத்தியாதோப்பு கூட்டு ரோடு அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். 

 

இதனைக் கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாகை மாலி, “நெற்பயிரை அழித்த சம்பவத்தைக் கண்டிப்பதாகவும், விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற எங்களைத் தடுத்தது கண்டிக்கத்தக்கது. எனவே என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

MLA Ayyappan inspects the work of construction of retaining wall in Thenpennai river

 

மழைக்காலங்களில் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது கடலூர் பகுதியில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீரை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அந்த கோரிக்கையை பரிசளித்த முதல்வர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றின் கரையில் 16 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை தரமாகவும் தொய்வின்றி விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கம்மியம் பேட்டை சாவடி அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்றும், கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்தை ரூ.220 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர் மணிவேல், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனா, ஆறுமுகம், சுமதி, ரங்கநாதன், சரத் தினகரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Communist Party struggle in Cuddalore
கோப்புப்படம்

 

கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுத்தூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை ஒன்று சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படுகிறது. அந்த வேலையை நிறுத்திவிட்டு அதே ஊரில் அங்கன்வாடி, நூலகம் இருக்கும் பகுதியில் நியாயவிலைக் கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆதிதிராவிட மக்களுக்கு மகளிர் சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும். ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர் கழிவறை வசதி ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். 

 

இந்த ஊரில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் தெரு மின் விளக்கு, குடிநீர், சுகாதார வளாகம் கட்டவும், காலை, மாலை இரண்டு வேலைகளிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். பெருமாள் கோவில் தெருவில் உள்ள சாக்கடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். மயானத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். ஆதிதிராவிடர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவப்பிரகாஷ், என்.ஆடு பெரியசாமி, ஆர். எழில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர். சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய செயலாளர் எம்.நிதி உலகநாதன், நல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் கே.ராஜ்குமார், நகர செயலாளர் கே.செல்வராசு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்