Skip to main content

“ஸ்டெர்லைட் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” -ஸ்டெர்லைட் முதன்மை செயலர்

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

நீர், நிலம், காற்று மக்களின் வாழ்வாதாரத்தின் இந்த மூன்று மூலக்கூறுகளையும், மாசுபடுத்தி பெரும்பான்னையான மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தது மட்டுமல்லாமல், பலரையும் ஊனமாக்கியது தூத்துக்குடியில் அமைந்திருக்கிற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை.

 

Sterlite

 

அதனை அகற்ற நகரின் மக்கள் முழுவீச்சுடன் 100 நாட்கள் போராடிய கடைசி நாளின்போது தன்னெழுச்சியாகவே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்றனர். அந்த சமயம் ஏற்பட்ட கலவரம் காரணமாக மாணவி, சிறுவர் உட்பட 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமுற்றனர். அவர்களில் ஊனப்படுத்தப்பட்டு வாழ்க்கையை இழந்தவர்களும் உண்டு. அதுதொடர்பாக ஒரு நபர் நீதிபதி கமிஷன் சி.பி.ஐ. என விசாரணை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஒருபுறம் விசாரணையும் நடந்து வருகிற நிலையில், ஸ்டெர்லைட் தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசாரணை நடத்திய சென்னை உயர்நீதின்றம் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதியில்லை என்று தீர்ப்பளித்தது.

 

நீதிமன்ற தீர்ப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது, பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

 

இந்த நிலையில் ஸ்டெர்லைட்டின் முதன்மை செயல் அலுவலரான பங்கஜ்குமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார், “ஸ்டெர்லைட் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவிகிதம் உற்பத்தி செய்து வந்தோம். ஒரு லட்சம் மக்களின் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. அரசு, தொழிற்சாலைகளைத் துவங்குவதை ஊக்குவிக்கும் நேரத்தில் எங்களைப் போன்ற ஆலைகளை மூடு நேரிடகிறது” என்றார். பேட்டியின் போது ஸ்டெர்லைட் ஆலையின் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.