Skip to main content

2 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

d

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). கூலித்தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். 

 

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இடைப்பாடி காவல்நிலைய காவல்துறையினர் செந்தில்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

salem omalur government school headmaster suspended

 

ஓமலூர் அருகே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில், வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த மயில்வாகனன் (50) என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிகளை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக மயில்வாகனன் மீது அண்மையில் புகார்கள் கிளம்பின. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் அழுது புலம்பினார். அதன்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓமலூர் மகளிர் காவல்நிலையத்திற்குத் திரண்டு சென்று ஆசிரியர் மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, காவல்துறையினர் மயில்வாகனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதையடுத்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜூ அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வருவது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

போக்ஸோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

POCSO convict gets 20 years in jail!

 

கரூர் மாவட்டம், குரும்பப்பட்டி ஒலிகரட்டூரைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (40). விவசாயி. இவர், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்குத் திருமணமாகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு ஆடு மேய்த்து வந்த 14 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார்.

 

கடந்த 2021ம் ஆண்டு நவ. 4ம் தேதி சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மகேஷ்வரன் கூறியதால் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு சிறுமி வயிறு வலிப்பதாகக் கூறியதால் கடந்த பிப். 14ம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நல நன்னடத்தை அலுவலர் க.பரமத்தி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி மகேஷ்வரன் மீது போலீஸார் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

 

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமா பானு நவம்பர் 17ம் தேதி அளித்த தீர்ப்பில், மகேஷ்வரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.