/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_83.jpg)
விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ஒருவர்.இவர் வீட்டில் தனியாகப் படுத்துத்தூங்கிக்கொண்டு இருந்தார். அதே ஊரைச் சேர்ந்த பொக்லிங் டிரைவரான 26 வயது கவிதாஸ் என்ற இளைஞன் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய, அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த கவிதாஸ் தான் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்திக் கொலை செய்துவிட்டு, அவர் இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த நேரத்தில் பாட்டி வீட்டிலிருந்து சத்தம் வரவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அந்த இடத்திலிருந்து தப்பித்து கவிதாஸ் ஓடியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தேதி நடந்தது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் முனியப்பன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாசைகைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தவழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சாந்திகுற்றச்சாட்டப்பட்ட கவிதாசுக்கு தண்டனை வழங்கிதீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கவிதாஸ் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும்,அதோடு 3000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கவிதாஸ் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். மூதாட்டி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கவிதாஸ் கண்டமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கலத்திராம்பட்டு பகுதியில் வயதான அக்கா, தங்கை இருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டுஅவர்களிடமிருந்து நகையைத்திருடிச் சென்றவர். இது சம்பந்தமாகவும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதே போல் இவர் எட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)