Skip to main content

பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020
 Court dismisses The case about  Ramzan's festival

 

ரம்ஜான் பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய  வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.


கரோனா ஊரடங்கால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான், மே 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில்  சமூக இடைவெளியை கடைப்பிடித்து 2 மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி திருவாரூரை சேர்ந்த குத்புதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஊரடங்கு நேரத்தில் அனைத்து மத வழிபாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள்,  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.