ராஜபாளையம், மலையடிப்பட்டியில் கந்தசாமி – சங்கரம்மாள் வசித்துவந்த வீடு திடீரென்று இடிந்து விழுந்ததில் இருவரும் காயமுற்றனர். அரசு மருத்துவமனையில் இவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ராஜபாளையம் சட்டமன்ற (திமுக) உறுப்பினர் தங்கப்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உரிய முறையில் சிகிச்சை அளிக்கும்படி அரசு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
விபத்து நடந்த வீடு சொந்த வீடா, வாடகை வீடா என அவர் கேட்ட போது, வாடகை வீடு என்றனர். உடனடியாக அவர்கள் வேறு வாடகை வீடு பார்த்துச் செல்வதற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியதோடு, வாடகைக்கு வீடு அமர்த்திக் கொடுக்கும் பொறுப்பினை திமுக நகரச் செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜாவிடம் ஒப்படைத்தார். மேலும், பாதிப்பினால் ஏற்பட்ட தேவைகளை அறிந்து, தமிழ்நாடு அரசே அனைத்து உதவிகளையும் செய்து தரும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
Published on 22/01/2025 | Edited on 22/01/2025