coronavirus treatment private hospital fee structure

Advertisment

கரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது இந்திய மருத்துவக் கவுன்சிலின் (Indian Medical Association) தமிழக பிரிவு (Tamilnadu state branch). அதன்படி, கரோனா பாதிப்புகுறைவாக இருந்தால் ஒரு நாளைக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 23,182 வசூலிக்கலாம். கரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் 10 நாளுக்கு மொத்தம் ரூபாய் 2,31,820 வசூலிக்கலாம். கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 25,377- ஐ கட்டணமாக வசூலிக்கலாம்.

கரோனா தீவிரமாக உள்ளவர்களுக்கு 17 நாட்களுக்குச் சேர்த்து கட்டணமாக ரூபாய் 4,31,411வசூலிக்கலாம் என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.