/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt6_0.jpg)
நவம்பர் 25- ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 25- ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மூடப்பட்ட அறை அல்லது அரங்கங்களில் 50% நபர்களுடனும், அதிகபட்சம் 200 பேருடனும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது. கரோனா பரவாமல் தடுக்க அனைத்து அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை தொடரும்.' என தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. வேல் யாத்திரையும், தி.மு.க. தேர்தல் பரப்புரையும் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)