சென்னையில் இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டது. முழுமுடக்கத்தின் போது பால் விற்பனை, ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசிய மருத்துவ சேவைக்கு மட்டுமே அனுமதி இருந்தது.
இந்த நிலையில், நான்காம் கட்ட தளர்வில் தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமுடக்கம் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. முழுமுடக்கம் இல்லை என்பதால் மற்ற நாட்களை போல் ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில் இயல்புநிலை திரும்பியது.