Skip to main content

திண்டுக்கல் மாவட்டதில் 170 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

திண்டுக்கல் கலெக்டர்  அலுவலகத்தில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு  வங்கி தலைவர் ராஜ்மோகன், அர்பன் பேங்க் தலைவர் பிரேம், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் உள்பட  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

  corona virus issue - minister Dindukal Sreenivasan press meet

 

          

இந்த  ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 170 பேரை தனிமைப் படுத்தி வீட்டில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க குறித்த நேரத்தில் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் மூடப்படவில்லை. அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக காலை நேரத்தில் கூடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு பகுதிகளில் பிரித்து காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் அந்த பகுதிகளில் சென்று கூட்டம் போடாமல் வாங்கிச் செல்ல வேண்டும். காய்கறிகள் எந்த இடங்களில் விற்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விரைவில் அறிவிப்பார். 

அத்தியாவசிய தேவைக்காக பொது மக்கள் தினமும் அரை மணி நேரம் மட்டும் வெளியே வந்து வாங்கி கொண்டு பிறகு மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டால் தொற்று நோய் பரவலை தடுக்க  முடியும். ஆதரவற்றவர்கள், வீடில்லாமல் பொது இடங்களில் தங்கி யுள்ளவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு இடத்தில் சமைத்து உணவு அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அம்மா உணவகம் செயல்படுகிறது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி பொது மக்கள்  வீட்டிலேயே இருக்க வேண்டும்" என தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

“தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” - சீனிவாசன் 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
AIADMK Srinivasan has said that we will not rest until BJP rules in Tamil Nadu

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆளுங்கட்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் மாநகர மேயர் மருதராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பிஜேபியை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் பிஜேபி ஆதரவு காரணமாகத்தான் நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி செய்தார் என ஓபிஎஸ் கூறியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஆம்பளையாக ஓபிஎஸ் வெளியே வந்தார். தற்பொழுது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வம் தந்த தீர்ப்பாகும். ஓ. பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது.

தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம். ஓ. பன்னீர்செல்வமோ மற்றவர்களோ யாரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன்பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்குத் தான் எங்களது ஆதரவு என்றார்.

மத்தியில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு, பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு  கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாசமா போய்விட்டது. தேர்தலில் மக்களை நம்பி அதிமுக உள்ளது. யாருக்கும் பயப்படும் கட்சி இல்லை என்று கூறினார்.