Skip to main content

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா பாதிப்பு காரணமாக கடலூர் நகரில் இன்று மாலை ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியியை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புசெல்வன் பார்வையிட்டார். 

 

 corona virus issue - Cuddalore District Collector Warning

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புச்செல்வன், "மாவட்டத்தில் 3090 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள்  கண்காணிப்பட்டு வருகின்றனர். இதில் இதுவரை 1250 வீடுகள் தனிமை படுத்தப்பட்டு உள்ளன. மீதம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று (27.03.2020) மாலை 5 மணி வரை கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனம் ஓட்டிவந்தவர்கள், சாலையில்  தேவையில்லாமல், பொறுப்பற்ற முறையில் சுற்றி திரிந்தவர்கள் என 92 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 320 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவினை பின்பற்ற வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அரசு மருத்துவ கல்லூரியில்‌ 440 படுக்கை அறைகள் கூடிய கரோனா வார்டு தயாராக உள்ளது" என தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: ஆந்திர மாநில வாலிபர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
threat to girl: Andhra state youth arrested

சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம்  ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூர் ஊரைச் சேர்ந்த கேசவன் மகன் கிரன் குமார் (21) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் சிறுமியின் அங்கங்கள் குறித்த புகைப்படத்தை அவ்வாலிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் கிரண்குமார் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ரகுபதி உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூருக்கு சென்று வாலிபர் கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வாலிபர் கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Bilateral Clash at Temple Festival

கடலூரில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவை நடத்துவதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோதல் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்தக் காவல்துறையினர் இரு தரப்பு மோதலையும் சமாதானப்படுத்த முயன்ற நிலைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பை மீறி ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

கோவில் திருவிழாவில் காவல்துறை முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.