/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_329.jpg)
கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு நேற்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கரோனா உறுதியான 231 பேரில், 174 பேர் சென்னையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,257 ஆக உள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரும் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)