Skip to main content

அம்மா மருந்தகமும் மக்கள் மருந்தகமும் சேவையாற்றலாமே? -கரோனா பரிதவிப்பும் எதிர்பார்ப்பும்...

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

கரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், சோப்புகள், திரவ சோப்புகள்,  போன்றவற்றை பயன்படுத்த வேண்டுமென மக்களை அறிவுறுத்தியபடியே உள்ளனர். கைகளில் தேய்த்துப் பயன்படுத்தும் கிருமிநாசினியும் இதில் அடக்கம். இவற்றை அதிக விலைக்கு விற்பதாகவும், அப்படி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பிலேயே எச்சரிக்கின்றனர்.

 

Corona virus - Amma Medicals

 



தட்டுப்பாடு காரணமாக மேற்கண்டவை பல மருந்துக்கடைகளில் கிடைப்பதில்லை. இந்த இக்கட்டான நேரத்தில்,  தமிழக அரசின் அம்மா மருந்தகங்களும், மத்திய அரசின்  மக்கள் மருந்தகங்களும் உரியவிலையில் தரமான முகக்கவசம் போன்றவற்றை மக்களுக்குக் கிடைக்கச் செய்யலாமே? 

ஏழை மக்கள்,  மலிவு விலையில் தரமான மருந்துகளைப் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொடங்கப்பட்டவைதான் மக்கள் மருந்தகங்களும் (பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா) தமிழக கூட்டுறவுத்துறையால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களும்.  

 

Corona virus - Amma Medicals

 



கரோனா அச்சத்தால் மக்கள் பெரும் பரிதவிப்பில் உள்ள இந்த நேரத்தில், மக்கள் மருந்தகங்களும், அம்மா மருந்தகங்களும் முகக்கவசம், கிருமிநாசினி திரவம் போன்றவை,  உரிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தங்களை அதிகார நாற்காலியில் அமர வைத்த மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும், மருத்துவப் பாதுகாப்பு தரவேண்டிய தருணம் இது!


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.