Skip to main content

சென்னையில் அதிகரிக்கும் கரோனா... தலைமைச் செயலர் அதிரடி உத்தரவு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Corona on the rise in Chennai ... Chief Secretary orders action!

 

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கரோனா என்பது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1000-ஐ நெருங்கும் வகையில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் 395 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 107 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (18.03.2021) காலை தெரிவித்திருந்தார். சென்னையில் சராசரியாக 350க்கும் மேல் கரோனா பாதிப்பு இருப்பதால், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க ஆர்.சி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த, சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி பணிகளை விரிவுபடுத்தவும்  தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அஞ்சலைக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Court custody order for anjalai

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சமயம் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையே பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையைடுத்து ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார், ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Armstrong case The startling information that will be released in succession

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி  (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று (20.07.2024) கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. 

Armstrong case The startling information that will be released in succession

இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் அருளின் நண்பர் ஆவார். அருள் இவ்வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த செல்போன்களை மற்றொரு குற்றவாளியான ஹரிஹரன் யாருக்கும் தெரியாமல் தூக்கி எறியுமாறு ஹரிதரனிடம் தெரிவித்ததன் பேரில், ஹரிதரன் 6 செல்போன்களையும் சேதப்படுத்தி திருவள்ளுவர் மாவட்டம், வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றிலிருந்து 3 செல்போன்கள் மீட்கப்பட்டன. மற்ற செல்போன்களையும் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

Armstrong case The startling information that will be released in succession

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பு ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்து அம்பலமாகி உள்ளது.மேலும் ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகளுக்கு ஹரிதரன் அடைக்கலம் கொடுத்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு ஹரிதரன் ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகளுடன் மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த ரவுடி ராமனுடன் ஹரிஹரன் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகியுள்ளது.

தனது அரசியல் களத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஹரிக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் செயல்பட்டு வந்ததால் ஹரிதரனுக்கும் ஆம்ஸ்ட்ராங் மீது பகை வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் திருவள்ளூர் வரும்போது கொலை செய்ய ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கடம்பத்தூர் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியை வேவு பார்க்க வைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற குற்றவாளிகளில் ஒருவரான ராமு உடன் ஹரிஹரன் நெருக்கமாக இருப்பதற்கான அவர் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆதாரங்களாக கிடைத்துள்ளன. இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் சில வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.