கடந்த மார்ச் 22-23 தேதிகளில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்தமாநாட்டில் உலக அளவிலிருந்து வந்தவர்கள் உட்படஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து சென்ற 1500 பேர்களில் 1134 பேர் திரும்பிவிட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் 144 லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர்.

Advertisment

thenkasi

தமிழகம் திரும்பியவர்களில் குறிப்பாக நெல்லை மற்றும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 பேர்கள் கரோனா தொற்று காரணமாக பாளை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் உள்ளனர்.

Advertisment

thenkasi

மேலும் தென்காசி மாவட்டத்தின் வாசுதேவநல்லூர், புளியங்குடி, தென்காசி, கடையநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர்கள், மத நிகழ்ச்சி மற்றும் இந்தோனேசியா சென்று வந்தவர்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் மேலரகம் பகுதிக்கு அழைத்து வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தனர். இதையறிந்த அந்தப் பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் திரண்டுவந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக, 8 பேர்களும் குற்றாலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுத் தனிமைபடுத்தப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் சோதனைக்காக தென்காசி அழைத்துச் செல்லப்பட்டனர்.