Published on 09/04/2021 | Edited on 09/04/2021
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் வரும் 10ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை (10.04.2021) முதல் தடை செய்யப்பட உள்ள சில்லறை வணிக மார்க்கெட், பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.