Skip to main content

பிறமாவட்டங்களிலும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!! 1500-ஐ நெருங்கிய உயிரிழப்பு!!!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

Corona effect increases in other areas

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த  முழு பொதுமுடக்கம் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக 4000 பேரை கடந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 65 பேர் உயிர் இழந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 44,959 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5 நாட்களாக இரண்டாயிரத்துக்கும் மேல் பாதிப்பு பதிவான நிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துவமனைகளில் 47 பேரும்,  தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 35 ஆவது நாளாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் 417 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் 1,033 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 111 பேரும், திருவள்ளூரில் 84 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

Corona effect increases in other areas

 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 60,592 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 56.62 சதவீதமாக உள்ளது.

அதிகபட்சமாக மதுரையில் இன்று மட்டும் 280 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மதுரையில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மதுரையில் கரோனாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 106 பேர் இதுவரை கரோனாவால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். 3,313 பேர் குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,500 நெருங்கி வருகிறது. மேலும் திருவள்ளூரில் இதுவரை 82 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 125 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,268 அதிகரித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று 74 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று 49 பேருக்கு  கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை  ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது வரை தேனி மாவட்டத்தில் 992  பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 753 பேர் சிகிச்சையில் உள்ளனர். 234 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிற்கு தேனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் முதல் முறையாக 100க்கும் அதிகமானோர் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அங்கு 106 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 807 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், சென்னையில் தொடர்ந்து கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் ஒரே நாளில் இன்று 2,400 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு உச்சத்தை தொட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.