Corona to the driver ...

திருவண்ணாமலை மாவட்டத்தின்ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் சேவூர் ராமச்சந்திரன். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 26 ந்தேதி மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு 20 கோடி மதிப்பிலான ஒரு சிறப்பு நிதி கடன் தொகுப்பினை வழங்கிவிட்டு, தனது காரில் காலை 11.30 மணியளவில் ஆரணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

அரசு காரில் பயணித்துக்கொண்டு இருந்தபோது, அமைச்சரின் ஓட்டுனருக்கு கரோனா தொற்று உறுதியான தகவல் செல்போன் வழியாக வந்தது. இது அருகில் இருந்த அமைச்சருக்கு தெரியவந்ததால், உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கினார். பின்னால் வந்த கட்சி பிரமுகர் ஒருவரின் காரில் ஏறி தனது சொந்த ஊருக்குச் சென்றார்.

தனது கார் ஓட்டுநருக்கு கரோனா என்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளார். அமைச்சர் உடனடியாக மாவட்ட மருத்துவதுறை அதிகாரிகளுடன் பேசி தனக்கும், தன்னுடன் இருந்தவர்களுக்கும், தன் குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பரிசோதனை நடைபெற்றுள்ளது. அமைச்சருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உட்பட அனைவரும் அச்ச மனநிலையிலேயே உள்ளனர்.

Advertisment